Our guru is Guru Ravi Thatha who is residing at Alampatti which is 5kms from Tirumangalam, Madurai. Instead of we explaining about our guru (which we are not worth to do it), we wish you to get blessings from him directly which will make you realise about him. Kindly call +919843538307, +919003421217 before visiting him. You might not have his dharshan if he is in meditation.
1. ஓம் அன்னை ஜெயலெட்சுமியின் அருந்தவப்புதல்வரே சரணம் சரணம்
2. ஓம் தந்தை நாராயணசாமியின் நன்மகனே சரணம் சரணம்
3. ஓம் மதுரை மண்ணின் அவதரித்த மகானே சரணம் சரணம்
4. ஓம் ஆதிசிவனின் மறுஅவதாரமே சரணம் சரணம்
5. ஓம் பதினென் சித்தர்களின் வழிதோன்றலே சரணம் சரணம்
6. ஓம் சித்தர்களின் நிலையை உணர்த்தியவரே சரணம் சரணம்
7. ஓம் சித்தர்களின் புண்ணிய ஆத்மாவே சரணம் சரணம்
8. ஓம் ரோட்டுசித்தராயிருந்து வீட்டுச்சுடரை எற்றுபவரே சரணம் சரணம்
9. ஓம் தாத்தா பட்டம் பெற்ற பெரியவரே சரணம் சரணம்
10. ஓம் ஐயங்களை அகற்றிய ஐயாவே சரணம் சரணம்
11. ஓம் அன்பின் அடையாளமான குருவே சரணம் சரணம்
12. ஓம் பன்பின் வடிவமான குருவே சரணம் சரணம்
13. ஓம் பாசப் பாற்கடலின் குருவே சரணம் சரணம்
14. ஓம் நேசத்தில் நிறைந்த குருவே சரணம் சரணம்
15. ஓம் வெற்றியின் வித்தான குருவே சரணம் சரணம்
16. ஓம் குழந்தைகளின் பாதுகாப்பான குருவே சரணம் சரணம்
17. ஓம் சக்திவான் சாதியான குருவே சரணம் சரணம்
18. ஓம் பிரகாசனின் புனிதமான குருவே சரணம் சரணம்
19. ஓம் அன்பு மடியும் காதலும் குருவே சரணம் சரணம்
20. ஓம் உள்ளத்தில் உள்ள குருவே சரணம் சரணம்
21. ஓம் குருவை மறவாது நினைப்பவரே சரணம் சரணம்
22. ஓம் குரு மந்திரத்தை போதிப்பவரே சரணம் சரணம்
23. ஓம் அன்புள்ளம் கொண்ட அன்பரே சரணம் சரணம்
24. ஓம் இரக்கம் கொண்ட இறைவா சரணம் சரணம்
25. ஓம் இகை குணத்தின் மறு உருவே சரணம் சரணம்
26. ஓம் உள்ளத்தில் கள்ளமில்லா கண்ணியரே சரணம் சரணம்
27. ஓம் தேவகுணம் படைத்த தேவகுருவே சரணம் சரணம்
28. ஓம் சாதி சமய பற்றற்ற சமதர்மமே சரணம் சரணம்
29. ஓம் சத்தியத்தின் மறு உருவமே சரணம் சரணம்
30. ஓம் நல்ல உள்ளங்களில் வாசம் செய்பவரே சரணம் சரணம்
31. ஓம் உண்மை உள்ளத்திற்கு பணிபவரே சரணம் சரணம்
32. ஓம் எண்ணத்தால் உள்ளத்தை அளப்பவரே சரணம் சரணம்
33. ஓம் உள்ளத்தால் எண்ணத்தை அளப்பவரே சரணம் சரணம்
34. ஓம் குப்பை தொட்டியிலும் அருள்புரியும் கோமேதகமே சரணம் சரணம்
35. ஓம் குடிசையில் இருந்தாலும் மனதின் கோபுரமானவரே சரணம் சரணம்
36. ஓம் அழுக்காடையில் அருள்தரும் அய்யனே சரணம் சரணம்
37. ஓம் சட்டியில் மனித வாழ்வைக் காட்டியவரே சரணம் சரணம்
38. ஓம் கம்பைப் போல் வாழ்வின் ஊன்றுக்கோலே சரணம் சரணம்
39. ஓம் பச்சை உடை தந்த அருட்பசுமையே சரணம் சரணம்
40. ஓம் குழந்தைகளுடன் விளையாடும் குருவே சரணம் சரணம்
41. ஓம் பற்றில்லா வாழவின் அடையாளமே சரணம் சரணம்
42. ஓம் அறிந்தும் அறியாமல் செய்த பிழைப்பொறுப்பவரே சரணம் சரணம்
43. ஓம் புகழை விரும்பாத புண்ணிய ஆத்மாவே சரணம் சரணம்
44. ஓம் அன்னதானமிட்டுப் பசி போக்கிய பகவானே சரணம் சரணம்
45. ஓம் செல்வத்திற்கு மயங்காத செழுமையே சரணம் சரணம்
46. ஓம் எல்லையில்லா அருள் பிரவாகமே சரணம் சரணம்
47. ஓம் அள்ளக் குறையாத அறிவுச் சுடரே சரணம் சரணம்
48. ஓம் குறை வில்லாத அட்சய பாத்திரமே சரணம் சரணம்
49. ஓம் சூட்சும அறிவை வளர்க்கும் ஆற்றலே சரணம் சரணம்
50. ஓம் ஆன்மிக நெறியை வளர்ப்பவரே சரணம் சரணம்
51. ஓம் தன்னம்பிக்கை தரும் தவஞானியே சரணம் சரணம்
52. ஓம் அழிவில்லாத அருட்செல்வமே சரணம் சரணம்
53. ஓம் நம்முள் செயல்படும் செயலாற்றலே சரணம் சரணம்
54. ஓம் அறநெறியைப் பின்பற்றும் அன்பரே சரணம் சரணம்
55. ஓம் முக்காலம் உணர்ந்த பிரம்ம ஞானியே சரணம் சரணம்
56. ஓம் ஆபத்தில் அழைக்காமல் காப்பவரே சரணம் சரணம்
57. ஓம் தீய குணங்களை அழிப்பவரே சரணம் சரணம்
58. ஓம் முற்பிறவியை அறிந்த ஆண்டவரே சரணம் சரணம்
59. ஓம் யோகநிலையின் தவக்கடலே சரணம் சரணம்
60. ஓம் தியானத்தின் மூலப்பொருளே சரணம் சரணம்
61. ஓம் எண் திசை காக்கும் பரம்பொருளே சரணம் சரணம்
62. ஓம் ஞாயிறு நாமம் பெயரில் கொண்டவரே சரணம் சரணம்
63. ஓம் திங்களொளியை கண்ணில் கொண்டவரே சரணம் சரணம்
64. ஓம் புவியை ஆன்மிகத்தால் ஆளப்பிறந்தவரே சரணம் சரணம்
65. ஓம் புத்தியை கீர்த்தி என்றுணர்த்தியவரே சரணம் சரணம்
66. ஓம் வியாழனில் போதனைகளை போதிப்பவரே சரணம் சரணம்
67. ஓம் வெள்ளியாக மிளிரும் விடியலே சரணம் சரணம்
68. ஓம் சங்கடங்களை அகற்றும் ஞானகுருவே சரணம் சரணம்
69. ஓம் பூர்வ புண்ணியத்தின் கருணையே சரணம் சரணம்
70. ஓம் வாழ்வியலை விளக்கிய தத்துவ ஞானியே சரணம் சரணம்
71. ஓம் எங்கள் மனப்பாரங்களைத் தாங்கும் திருபாதமே சரணம் சரணம்
72. ஓம் அறுசுவைகளைக் துறந்த அருட்கடலே சரணம் சரணம்
73. ஓம் அனிகலங்களைத் துறந்த அய்யனே சரணம் சரணம்
74. ஓம் பெற்ற யாசகத்தை கொடுக்கும் கொடையாளரே சரணம் சரணம்
75. ஓம் சத்ய சோதனைகளை சுமக்கும் சத்யமே சரணம் சரணம்
76. ஓம் சோதனைகளை சாதனையாக்கிய ஜெயமே சரணம் சரணம்
77. ஓம் எந்நிலையிலும் தன்னிலையான தவமே சரணம் சரணம்
78. ஓம் சித்தாந்ததை எங்களுக்கு அருள்புரிபரே சரணம் சரணம்
79. ஓம் தத்துவத்தால் பாடம் தரும் ஆசானே சரணம் சரணம்
80. ஓம் கருணையான அன்பு ஊற்றே சரணம் சரணம்
81. ஓம் அறிவுக்கண் திறந்த அறிஞரே சரணம் சரணம்
82. ஓம் மெய்பொருள் அறிந்த ஞானியே சரணம் சரணம்
83. ஓம் தாயின் சேலையை சுமந்திருக்கும் குருவே சரணம் சரணம்
84. ஓம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் தந்தையே சரணம் சரணம்
85. ஓம் சமயத்தில் உதவும் நட்புருவே சரணம் சரணம்
86. ஓம் தாய் தந்தையை தெய்வமென கூறும் குருவே சரணம் சரணம்
87. ஓம் முதியோரின் அருமையை உணர்த்தும் தாத்தாவே சரணம் சரணம்
88. ஓம் அருட்செல்வத்தின் அழிவில்லா விருட்சகமே சரணம் சரணம்
89. ஓம் மனதை செம்மைப்படுத்தும் செழுமையே சரணம் சரணம்
90. ஓம் கடமையை உணர்த்தும் கண்ணியரே சரணம் சரணம்
91. ஓம் துன்பத்தை இன்பமாக்கும் இறைவனே சரணம் சரணம்
92. ஓம் குழம்பிய மனதைப் பக்குவப்படுத்துபவரே சரணம் சரணம்
93. ஓம் நோய் போக்கிய மருத்துவரே சரணம் சரணம்
94. ஓம் அறத்தைப் போதித்த தர்மரே சரணம் சரணம்
95. ஓம் உழைப்பே உயர்வே என உணர்த்தியவரே சரணம் சரணம்
96. ஓம் வழிகாட்டியில்லாமல் வளர்ந்த வளர்பிறையே சரணம் சரணம்
97. ஓம் சேவையில் சோர்வடையாத சேவகரே சரணம் சரணம்
98. ஓம் மன தைரியம் தரும் மகானே சரணம் சரணம்
99. ஓம் ஆன்மிக கடலில் கிடைத்த நல்முத்தே சரணம் சரணம்
100. ஓம் தடுமாறும் மனங்களின் கலங்கரை விளக்கமே சரணம் சரணம்
101. ஓம் நம்பிக்கையின் வடிவமான நாயகரே சரணம் சரணம்
102. ஓம் பொறுமையின் வடிவமான நிலமே சரணம் சரணம்
103. ஓம் கருத்துகளின் வற்றாத ஜீவநதியே சரணம் சரணம்
104. ஓம் நம்முள் இருக்கும் சுவாசக்காற்றே சரணம் சரணம்
105. ஓம் அக இருளை அகற்றும் அருட்ஜோதியே சரணம் சரணம்
106. ஓம் அன்புமழை பொழியும் வானமே சரணம் சரணம்
107. ஓம் ஆபத்தில் காக்கும் ரட்சகரே சரணம் சரணம்
108. ஓம் பிச்சைக்காரன் என்று கூறியே சகல சௌபாக்கியம் தரும் பரமாத்மாவே சரணம் சரணம்